PUBLISHED ON : ஜன 10, 2026 06:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குள்ளஞ்சாவடி: மகன் மாயமானது குறித்து தந்தை போலீசில் புகார் அளித்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகன் சந்தோஷ்குமார், 25; செம்மங்குப்பம் பெட்ரோல் பங்கில் வேலை செய்து வந்தவர், நேற்று முன்தினம் வழக்கம் போல, வீட்டில் இருந்து பணிக்கு மொபட்டில் கிளம்பினார்.
ஆனால் அதன் பின்பு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை. இதையடுத்து தனது மகன் மாயமானது குறித்து செந்தில்குமார் குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

