sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

/

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை


PUBLISHED ON : பிப் 16, 2026 03:08 AM

Google News

PUBLISHED ON : பிப் 16, 2026 03:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக வனத்துறை அமைச்சர், ராஜ கண்ணப்பன் பேச்சு: விஜயகாந்த் இருந்த போது, தே.மு.தி.க., எதிர்க்கட்சியாக இருந்தது. தேர்தல் கூட்டணி அமைக்க, தே.மு.தி.க., இரு கட்சிகளிடமும் கூட்டணி பேசக்கூடாது. இங்கேயும் பேசுவது, அங்கேயும் பேசுவது என்பது சரியாக வராது. விசுவாசமாக இருந்தால் ஒரு பக்கம் தான் இருக்க வேண்டும்.

சரி விடுங்க... நீங்களும் தான், அ.தி.மு.க.,வில் அமைச்சரா இருந்தீங்க... அங்க இருந்து விலகி, தனிக்கட்சி துவங்கி, அதை, தி.மு.க.,வில் சேர்த்தீங்க... அங்க அமைச்சர் பதவி கிடைக்காம மறுபடியும், அ.தி.மு.க.,வுக்கு போய், அங்கயும் மதிப்பில்லாம, மறுபடியும், தி.மு.க.,வுக்கு வந்து, இப்ப அமைச்சராகலையா... அரசியல்ல விசுவாசம் எல்லாம் பார்த்தா வேலைக்காகாது!



தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் பேச்சு: இந்தியாவிலேயே அதிகவரி வருவாயை கொடுக்கும் மாநிலமாக தமிழகம் உள்ள போதிலும்,அதற்கு திருப்பி கிடைப்பது ஒன்றுமில்லை. 'மத்திய அரசின் பட்ஜெட், வளர்ச்சி அடைந்த இந்தியாவுக்கானது' என்ற மத்திய அரசின் கூற்று, உண்மைக்கு புறம்பானது. இந்தியாவின் கடன், 215 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

அதாவது, 'தமிழக அரசின் மொத்த கடன், 5 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2021-ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்த ஐந்தாண்டுகளில் மட்டும், 4.56 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன் வாங்கியுள்ளது' என்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு இவர் பதில் தருவாரா?



சென்னை, மயிலாப்பூர் மேற்கு பகுதி, அ.தி.மு.க., செயலர் விஜயபாஸ்கர் பேட்டி: தி.மு.க., வினர் வீடு, வீடாக சென்று, 'உங்கள் கனவு என்ன' என்று கேட்கின்றனர். ஒவ்வொருவரும் சொல்லும் கனவுகளை, தி.மு.க., அரசால் நிறைவேற்ற முடியாது. தேர்தலுக்காக, தங்களுக்கு, 'லாலிபாப்' மிட்டாய் கொடுத்து குழந்தைகளை ஏமாற்றுவது போல், நம்மை ஏமாற்றுகின்றனர் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்'னு சொல்றாரோ?

தமிழக, பா.ஜ., தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவின் அமைப்பாளர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மத வேறுபாடின்றி, பல திட்டங்களை சிறுபான்மையினருக்கு செயல்படுத்தியுள்ளது. வங்கி கணக்கு இல்லாத ஏழை குடும்பங்களுக்கு நிதி திட்டம், வீடற்றவர்களுக்கு வீடுகள், 5 லட்சம் ரூபாய் வரை சுகாதார காப்பீடு ஆகிய பல திட்டங்களின் பயனாளிகளில் கணிசமான அளவு, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவ சமூகத்தினரும்

உள்ளனர்.

இதை எல்லாம் தேர்தல் பிரசாரத்தில், புள்ளி விபரங்களுடன் எடுத்து வைத்து, 'நாங்க, சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி இல்லை' என்பதை நிரூபியுங்க!






      Dinamalar
      Follow us