/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்தால் கடும் நடவடிக்கை
/
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்தால் கடும் நடவடிக்கை
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்தால் கடும் நடவடிக்கை
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை தடுத்தால் கடும் நடவடிக்கை
PUBLISHED ON : டிச 10, 2024 12:00 AM
ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை
தடுத்தால் கடும் நடவடிக்கை
பாலக்கோடு, டிச. 10-
வனத்துறைக்கு சொந்தமான இடங்களில், ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, அதை தடுக்கும் நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, வனச்சரக அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட பெல்ரம்பட்டி, திருமல்வாடி, சீங்காடு, மகேந்திரமங்கலம், ஜிட்டாண்டஹள்ளி சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள மலைப்பகுதி மற்றும் அதை ஒட்டிய வனத்துறைக்கு சொந்தமான நிலங்களை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
அதில், கொட்டகை அமைத்தல், வீடு கட்டுதல், தோட்டம் அமைத்தல், நிலங்களை சமன் செய்தல், சாலைகள் அமைத்தல், விவசாயம் மற்றும் வேட்டையாடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறான ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, வனக்காவலர்களின் பணியை தடுப்பது மற்றும் மிரட்டல் விடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் மூலம், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இது குறித்து பாலக்கோடு வனச்சரக அலுவலர் நடராஜ் தலைமையில், ஜிட்டாண்டஹள்ளி, மாரவாடி, கொத்தலம், குண்டாங்காடு உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேற்று, ஒலிபெருக்கி மூலம் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.