/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தமிழ் சிற்றிதழ்கள் கூட்டமைப்பு காஞ்சியில் முப்பெரும் விழா
/
தமிழ் சிற்றிதழ்கள் கூட்டமைப்பு காஞ்சியில் முப்பெரும் விழா
தமிழ் சிற்றிதழ்கள் கூட்டமைப்பு காஞ்சியில் முப்பெரும் விழா
தமிழ் சிற்றிதழ்கள் கூட்டமைப்பு காஞ்சியில் முப்பெரும் விழா
PUBLISHED ON : ஏப் 01, 2025 12:00 AM

காஞ்சிபுரம்,சென்னை, காஞ்சிபுரம் தமிழ்நாடு சிற்றிதழ்கள் மற்றும் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு, எழுத்தாணி தமிழ் கலை இலக்கிய சங்கம் சார்பில், புதிய நிர்வாகிகள் அறிமுகம், மகளிர் தின விழா, கவியரங்கம் என, முப்பெரும் விழா காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
தமிழ்நாடு சிற்றிதழ்கள் மற்றும் எழுத்தாளர்கள் கூட்டமைப்ப பொது செயலர் கவிஞர் சுரேஷ் தலைமை வகித்தார். தலைவர் டாக்டர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். செயல் தலைவர் எழுத்தாணி அரிராசு வரவேற்றார்.
அனைத்திந்திய தமிழ் சங்க தலைவர் ஆவடி குமார், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்க மாநில தலைவர் சுபாஷ், காஞ்சிபுரம் அருங்காட்சிய காப்பாட்சியர் உமாசங்கர், தொல்லியல் ஆய்வாளர் ஜவகர்பாபு உள்ளிட்டோர் நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பேசினர்.
இதில், டாக்டர் பராசக்தி, பனை இளவரசி கவிதா, டாக்டர் ஜீவரேகா உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.