தந்தையின் வெற்றிக்காக ரவுடியை கட்சியில் சேர்த்த தனயன்!
தந்தையின் வெற்றிக்காக ரவுடியை கட்சியில் சேர்த்த தனயன்!
PUBLISHED ON : மார் 31, 2026 03:50 AM

''ம ண் கடத்தல் கும்பலின் கோஷ்டி மோதலை கேளுங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''திருப்பூர் மாவட்டத்தில், தாராபுரம், குண்டடம், காங்கேயம் பகுதிகள்ல, சட்ட விரோதமா கிராவல் மண் கடத்தல் நடக்குது... தி.மு.க.,வினர் ஆசியோடு கடத்தல் நடப்பதால், அதிகாரிகள் மவுனமா இருக்காங்க...
''இந்த சூழல்ல, மண் கடத்தல் கும்பல்கள் இடையேயும் கோஷ்டி மோதல் நிலவுது... இவங்க, எதிர் தரப்பை பத்தி அதிகாரிகளுக்கு, 'போட்டு' குடுக்கிறாங்க... சமீபத்துல ஒரு தரப்பு, கலெக்டர் அலுவலகத்துக்கு போய் போராட்டமே நடத்துச்சுங்க...
''ஆனாலும், தேர்தல் பணிகளை காரணம் காட்டி, மண் கடத்தல் சம்பவத்தை, அதிகாரிகள் வழக்கம்போல கண்டுக்காம விட்டுட்டாங்க... இவங்க கோஷ்டி மோதல்ல அடிதடி, வெட்டு, குத்து நடக்கிறதுக்குள்ள அதிகாரிகள் முழிச்சுக்கிட்டா நல்லதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மேலிடத்தை பார்த்துட்டு வாங்கோன்னு சொல்லிடறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டத்தில், ரியல் எஸ் டேட் உரிமையாளர் கள், ஏராளமான வீட்டு மனை பிரிவுகளை உருவாக்கிண்டு இருக்கா... இதுக்கான எல்லா அமைப்புகள்லயும், முறைப்படி அனுமதி வாங்கியதும், முதல் மனையை பத்திரப்பதிவு அலுவலகத்துல பதிவு செய்யணும் ஓய்...
''முதல் மனை பதிவுக் கான விண்ணப்பத்தை ஆதாரமா வச்சு, மாவட்ட பதிவாளர், மனை பிரிவுகளை நேர்ல ஆய்வு பண்ணி, பக்கத்துல இருக்கற மனைகளின் சந்தை மதிப்பை கணக்கிட்டு, பதிவு கட்டணத்தை நிர்ணயிப்பார் ஓய்...
''முன்னாடி, சம்பந்தப் பட்ட துறையின் மேலிடத்தை, 'கவனிச்சு' தான் அனுமதி வாங்குவா... இப்ப, தேர்தல் நடத்தை விதிகள் அமல்ல இருக்கற சூழல்ல, மாவட்ட பதிவாளரை ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் அணுகினாலும், பழையபடியே, 'மேலிடத்தை பார்த்துட்டு வாங்கோ'ன்னு பெண் அதிகாரி, அலைய விடறாங்க ஓய்...
''இதனால, திருவள்ளூர் மாவட்டத்துல, 100க்கும் மேற்பட்ட மனைகளை விற்க முடியாம, ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தவிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''இந்திரா மேடம்... சாயந்தரமா பேசுதேன்...'' எனக் கூறி வைத்தபடியே, ''பிரபல ரவுடியை கட்சியில சேர்த்துட்டாரு வே...'' என்றார்.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த வண்டறந்தாங்கலைச் சேர்ந்தவர், ஜானி... பிரபல ரவுடியான இவர் மீது கொலை, ஆள் கடத்த ல் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கு வே...
''இவரது மனைவி ஷாலினி... வக்கீலான இவங்க, பகுஜன் சமாஜ் கட்சியின் வேலுார் மாவட்டச் செயலரா இருந்தாங்க வே...
''இந்த சூழல்ல, சமீபத்தில் காட்பாடியில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலுார் தி.மு.க., - எம்.பி.,யுமான கதிர் ஆனந்த் முன்னிலையில் ஜானி, அவரது மனைவி உட்பட, 300 பேர் தி.மு.க., வில் சேர்ந்தாவ வே...
''வர்ற தேர்தல்ல, காட்பாடியில் துரைமுருகன் மறுபடியும் போட்டியிடுதாரு... 'தன் தந்தையை ஜெயிக்க வைக்க, ரவுடியையும், அவரது ஆதரவாளர்களையும் அமைச்சரின் மகன் கட்சியில் சேர்த்திருக்கார்'னு எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பி னர்.
