/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
131 ஆண்டு பழமையான கட்டடம் பராமரிப்பின்றி பாழாகும் அவலம்
/
131 ஆண்டு பழமையான கட்டடம் பராமரிப்பின்றி பாழாகும் அவலம்
131 ஆண்டு பழமையான கட்டடம் பராமரிப்பின்றி பாழாகும் அவலம்
131 ஆண்டு பழமையான கட்டடம் பராமரிப்பின்றி பாழாகும் அவலம்
PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

பூந்தமல்லி:பூந்தமல்லியில், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில், 1893ல் கட்டப்பட்ட ராணுவ தடவாள கட்டடம் உள்ளது. சிவப்பு செங்கற்களால் கட்டப்பட்ட இந்த கட்டடம், 58,200 சதுர அடியில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.
முதல் உலகப்போர் வெற்றியின் நினைவாக கட்டப்பட்ட இந்த கட்டடம்,'விக்டரி மெமோரியல்' பார்வையற்றோர் பள்ளியாக, கடந்த 1931ம் ஆண்டு மாற்றப்பட்டது.
தற்போது, தமிழக மாற்றுத்திறனாளிகள் துறை கட்டுப்பாட்டில், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியாகவும், பார்வையற்றோர் மறுவாழ்வு இல்லமாகவும் இந்த கட்டடம் இயங்குகிறது.
மொத்தம் 131 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்புமிக்க இந்த கட்டடம், தற்போது பராமரிப்பின்றி உள்ளது. கட்டடத்தின் மீது பல இடங்களில் மரக்கன்றுகள் வளர்ந்து வருகின்றன.
இதனால், கட்டடத்தில் விரிசல் ஏற்படும் ஆபத்து உள்ளது. இந்த கட்டடத்தின் மீதுள்ள மரங்களை அகற்றி, கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.