sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டீ கடை பெஞ்ச்

/

பறவைகள் கொன்று குவிப்பு வழக்கு பதியாத வனத்துறை

/

பறவைகள் கொன்று குவிப்பு வழக்கு பதியாத வனத்துறை

பறவைகள் கொன்று குவிப்பு வழக்கு பதியாத வனத்துறை

பறவைகள் கொன்று குவிப்பு வழக்கு பதியாத வனத்துறை


PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மார் 14, 2024 12:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ.,யில் ஊசுட்டேரி உள்ளது. தமிழகம், புதுச்சேரி மாநிலங்களால் பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஏரியில், கடந்த 10ம் தேதி வனவிலங்குகள், பறவைகள் கொத்துத் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டன.

வழக்கமாக, ஒரு சில கொக்குகளை கொன்றால் கூட, வழக்கு பதிவு செய்து, 'போஸ்' கொடுக்கும் புதுச்சேரி வனத்துறை, இவ்விஷயத்தில் இதுவரை வழக்கு பதிவு செய்யாமல் மவுனமாக உள்ளது.

இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:

ஊசுட்டேரி ஒன்றும் சாதாரணமான இடம் அல்ல. பறவை சரணாலயம். அங்கு அடைக்கலமான பறவைகள், விலங்குகளை கொன்றுள்ளனர். அதை, எப்.ஐ.ஆர்., பதிவு செய்து விசாரிப்பதில் வனத்துறைக்கு என்ன தயக்கம் எனத் தெரியவில்லை. அரசியல் அழுத்தம் காரணமாக இவ்விஷயத்தை மூடி மறைக்க முயல்வதாக தெரிகிறது.

எனவே இப்பிரச்னையில் கவர்னர் மற்றும் தலைமை செயலர் நேரடியாக தலையிட வேண்டும்.

இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us