/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'மண்டலம்' கோரிக்கையால் மிரண்டு ஓடிய 'லேடி ஆபீசர்!'
/
'மண்டலம்' கோரிக்கையால் மிரண்டு ஓடிய 'லேடி ஆபீசர்!'
'மண்டலம்' கோரிக்கையால் மிரண்டு ஓடிய 'லேடி ஆபீசர்!'
'மண்டலம்' கோரிக்கையால் மிரண்டு ஓடிய 'லேடி ஆபீசர்!'
PUBLISHED ON : நவ 02, 2024 12:00 AM

''வாரிசா யாரும் வராததால புலம்புறாருங்க...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' எனகேட்டார், அன்வர்பாய்.
''திருச்செந்துார் தொகுதியில், அஞ்சு முறைஜெயிச்சவர் அனிதா ராதாகிருஷ்ணன்... இப்ப,மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சரா இருக்காருங்க...
''ஆக்டிவ்வா அரசியல்செய்ற இவர், இப்ப கடும்முதுகுவலியால தவிக்கிறாருங்க... இதனால, முன்ன மாதிரி ஓடியாடி அரசியல் பணிகளை பார்க்கவும் முடியலை...
''இவருக்கு அனந்த ராமகிருஷ்ணன், அனந்த பத்மநாபன், அனந்த மகேஸ்வரன்னு மூணு மகன்கள் இருக்காங்க... இவங்கள்ல யாருமே அரசியல்ல ஈடுபாடு காட்ட மாட்டேங்கிறாங்க...
''கடைசி மகனிடம் அனிதா கெஞ்சி கேட்டும்,அவரும் மறுத்துட்டாராம்... இதனால, 'என்அரசியல் வாரிசா யாரையும்உருவாக்க முடியலையே'ன்னு அமைச்சர், 'அப்செட்'ல இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மாமூலும் வாங்கிட்டு, மாட்டியும் விடுறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் பகுதியில், 'குட்கா' பொருட்கள் விற்பனை செய்ற கடைகள்ல சோதனை நடத்தவே, தனி போலீஸ் டீம் போட்டிருக்காங்க... இவங்க சோதனையில யாராவது பிடிபட்டா, 'உங்களை ஜெயில்ல அடைச்சா, ரிலீஸாக ஒரு மாசம் ஆகும்'னு மிரட்டுறாங்க பா...
''இதனால பயப்படுற வியாபாரிகளிடம், 20,000 முதல் 50,000 ரூபாய் வரை கறந்துட்டு விட்டுடுறாங்க... சமீபத்துல, திருப்பைஞ்ஞீலியில்சில கடைகள்ல சோதனைநடத்தி மாமூல் வசூல் செஞ்சாங்க பா...
''அதே கையோட, இந்த கடைகள் பற்றியதகவல்களை, சத்தமில்லாம உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும், 'பாஸ்' பண்ணிட்டாங்க... அவங்களும் ஓடோடி வந்து, 'குட்கா' பொருட்களை பறிமுதல் பண்ணி,கடைகளுக்கு, 'சீல்' வச்சுட்டாங்க பா...
''இதனால, 'மொத்தமாகுட்கா பொருட்களை விற்கிறவங்களை விட்டுட்டு, சில்லரை வியாபாரிகளான எங்களை போட்டு டார்ச்சர் பண்றாங்களே... இந்த ஸ்பெஷல்டீம் மேல, எஸ்.பி., வருண்குமார் நடவடிக்கைஎடுக்கணும்'னு வியாபாரிகள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பெண் அதிகாரி தெறிச்சு ஓடிட்டாங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கோவை மாநகராட்சியில் ஒரு பெண் மண்டல தலைவர் இருக்காங்க... இவங்க, தன் வார்டுக்கு ஒரு லேடி ஆபீசர் தான் வேணும்னு அடம் பிடிச்சு கேட்டு வாங்குனாங்க ஓய்...
''அந்த லேடி ஆபீசரும், 'மண்டலம்' சொல்ற வேலைகளை கச்சிதமா முடிச்சு குடுத்திருக்காங்க... சுமுகமா போயிட்டு இருந்த நேரத்துல, சமீபத்துல லேடி ஆபீசரை கூப்பிட்ட மண்டலம், 'தீபாவளி செலவுக்கு பணம் தேவைப்படறது...அதனால, ஏதாவது ஒரு வேலையை செஞ்சு முடிச்சதா, 'பில்' போட்டு,பணம் எடுத்து குடுங்க'ன்னுஅசால்டா கேட்டிருக்காங்க ஓய்...
''இதைக் கேட்டு லேடி ஆபீசர், 'ஜெர்க்' ஆகிட்டாங்க... 'ஆஹா...வேலைக்கே உலை வச்சிடுவாங்க போலிருக்கு'ன்னு பதறி போனவங்க, மாநகராட்சி உயர்அதிகாரியை பார்த்து கெஞ்சி கூத்தாடி, வேற மண்டலத்துக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு, 'எஸ்கேப்' ஆகிட்டாங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப,பெஞ்ச் மவுனமானது.