PUBLISHED ON : நவ 21, 2024 12:00 AM

கடம்பத்துார், நவ. 21-
கடம்பத்துார் ஒன்றியம், வயலுார் ஊராட்சியில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கிளாய் ஊராட்சி வழியாக, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் ஒன்றிய சாலை உள்ளது.
இந்த சாலை வழியாக, வயலுார், உளுந்தை, மும்முடிக்குப்பம் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பகுதியினர், பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.
மேலும், இவ்வழியே தொழிற்சாலைகளுக்கு வரும் கனரக வாகனங்கள், அரசு மற்றும் தனியார் பேருந்து, பள்ளி, கல்லுாரி பேருந்து என, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலை ஆங்காங்கே சேதமடைந்தும், கற்கள் பெயர்ந்தும், 'மெகா' பள்ளங்கள் உருவாகி மோசமான நிலையில் உள்ளதால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதியினர் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
