/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சைக்கிள் ஸ்டாண்டில் 'கல்லா' வசூலிக்கும் நகராட்சி புள்ளி!
/
சைக்கிள் ஸ்டாண்டில் 'கல்லா' வசூலிக்கும் நகராட்சி புள்ளி!
சைக்கிள் ஸ்டாண்டில் 'கல்லா' வசூலிக்கும் நகராட்சி புள்ளி!
சைக்கிள் ஸ்டாண்டில் 'கல்லா' வசூலிக்கும் நகராட்சி புள்ளி!
PUBLISHED ON : அக் 31, 2024 12:00 AM

பட்டாசு சத்தத்துக்கு இடையில், அதிகாலையேபெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், தீபாவளிவாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். குப்பண்ணாநீட்டிய ஸ்வீட் பாக்சில் இருந்து, மைசூர்பாவை எடுத்தபடியே, ''மண் மாமூல்ல கொழிக்கிறாங்கபா...'' என்றார், அன்வர்பாய்.
ஜாங்கிரியை சுவைத்தபடியே, ''எந்த ஊருலங்க...'' என கேட்டார்,அந்தோணிசாமி.
''சேலம் மாவட்டம், இடைப்பாடி தாலுகாவுலஆடையூர், பக்கநாடு பகுதிகள்ல நிறைய செம்மண் இருக்கு... இதனால, இந்த பகுதியில,100க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் செயல்படுது பா...
''இந்த சூளைகளுக்கு தேவையான செம்மண்ணை அரசு அனுமதிஇல்லாம, திருட்டுத்தனமாதான் அள்ளிட்டு இருக்காங்க... இதை கண்காணிக்க வேண்டியவருவாய் துறையினரும்,பூலாம்பட்டி போலீசாரும்,மண் திருட்டுக்கு துணையாஇருக்காங்க பா...
''இதுக்காக, இவங்களுக்கு லட்சக்கணக்குலமாமூலும் கிடைக்குது... அதே நேரம், அரசுக்கு கோடிக்கணக்குல வருவாய் இழப்பு ஏற்படுது பா...'' என்றார், அன்வர்பாய்.
''சுற்றுலா மாளிகையைகைப்பற்ற முண்டா தட்டுதாவ வே...'' என, அடுத்ததகவலுக்கு மாறிய பெரியசாமி அண்ணாச்சியேதொடர்ந்தார்...
''திருப்பூர் மாவட்டம்,உடுமலை பக்கத்துலபிரபல சுற்றுலா தலமான திருமூர்த்தி மலை இருக்குல்லா... அங்கனயே சுற்றுலா மாளிகை, சிறுவர்பூங்கா மற்றும் நீச்சல் குளமும் இருக்கு வே...
''இந்த மூணுமே தளி பேரூராட்சியில் இருந்தாலும், இதன் நிர்வாகம் எல்லாம் உடுமலை ஒன்றியம் கட்டுப்பாட்டுலதான் இருக்கு... இதனால,இந்த நிர்வாகத்தை தங்களுக்கு மாத்தும்படி ஒன்றிய நிர்வாகத்துக்கு, சமீபத்துல தளி பேரூராட்சிகடிதம் அனுப்பிச்சு வே...
''இதன்படி, மூணு இடங்களையும் தளி பேரூராட்சி வசம் ஒப்படைக்க, ஒன்றிய கூட்டத்துல தீர்மானம் கொண்டு வந்தாவ... ஆனா, இதுக்கு ஒன்றியகவுன்சிலர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவிச்சிட்டாவ வே...
''இத்தனைக்கும், தளி பேரூராட்சி மற்றும் உடுமலை ஒன்றியத்துல தி.மு.க., கவுன்சிலர்கள்தான் பெரும்பான்மையாஇருக்காவ... இருந்தாலும்,சுற்றுலா இடங்களை கைப்பற்றும் விவகாரத்துலஎதிர்க்கட்சிகள் மாதிரி முட்டிக்கிட்டு நிக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''என்கிட்டயும் உள்ளாட்சி தகவல் ஒண்ணுஇருக்கு ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம்,மணப்பாறை நகராட்சியில்சைக்கிள் ஸ்டாண்ட் ஏலம்தொடர்பா, சில மாதங்களுக்கு முன்னாடி தீர்மானம் கொண்டு வந்தாங்க... இதுக்கு ஆதரவா, 15 கவுன்சிலர்களும், எதிராக 10 பேரும்கை துாக்கினா ஓய்...
''ஆனாலும், நகராட்சி முக்கிய புள்ளி, எதிராகவிழுந்த ஓட்டுகளை மட்டும் கணக்குல காட்டி,ஏலத்தை ரத்து பண்ணி, மறு ஏலம் அறிவிச்சாரு...ஆதரவு தீர்மானத்தை நிறைவேற்றாத முக்கியபுள்ளி மேல, உயர் நீதிமன்ற மதுரை கிளையில்,கவுன்சிலர்கள் தரப்புலவழக்கு போட்டா ஓய்...
''வழக்கு விசாரணைக்கு வந்தா, தனக்கு சிக்கல்னு நினைக்கற முக்கிய புள்ளி, 'விசாரணையை முடிஞ்சவரை தள்ளி போடுங்கோ'ன்னு வக்கீலுக்கு லட்சக்கணக்குல செலவழிக்கறார்... இதுக்கு மத்தியில, சைக்கிள் ஸ்டாண்டை, தனக்கு வேண்டியவாளை வச்சு நடத்தி, தினமும் ஆயிரக்கணக்குல, 'கல்லா' வசூலிச்சுண்டுஇருக்கார் ஓய்...'' எனமுடித்தார், குப்பண்ணா.
''எல்லாரும் மதியம் வீட்டுக்கு வந்துடுங்க... மட்டன் பிரியாணி, வஞ்சிரம் வறுவல், சிக்கன் 65 எல்லாம் ஏற்பாடு பண்ணியிருக்கேன்... குப்பண்ணா பயப்படாதீரும்... உமக்கு பன்னீர் பிரியாணி இருக்கு வே...'' என, சிரித்தபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் எழுந்தனர்.