/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வாலிபருக்கு வெட்டு மாங்காடில் மூவர் கைது
/
வாலிபருக்கு வெட்டு மாங்காடில் மூவர் கைது
PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்றத்துார், மாங்காடு அருகே சின்னகொளுத்துவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் தவசீலன், 28; வேன் ஓட்டுநர். இவருக்கும், தாம்பரம் பகுதியை சேர்ந்த பூபதி, 35, என்பவருக்கும், முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வீட்டின் அருகே நின்றிருந்த தவசீலனை, பூபதி மற்றும் அவரது நண்பர்கள், கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.
தவசீலன், பலத்த வெட்டு காயங்களுடன், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்படி, வழக்கு பதிந்து விசாரித்த மாங்காடு போலீசார், பூபதி, கணேஷ், 20, பாபு, 23, ஆகிய மூவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.