உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஆக 27, 2025 12:00 AM
அ நிறம் | அளவு
சென்னை :
ஆறு மண்டலங்களில், 28, 39, 30 ஆகிய தேதிகளில், குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மெட்ரோ ரயில் பணிக்காக, அண்ணா நகர் மண்டலம், திருமங்கலத்தில் குடிநீர் பிரதான குழாயை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதனால், 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், மாதவரம், அம்பத்துார், திரு.வி.க., நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில், சில பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும்.
அப்பகுதி மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குடிநீரை சேமித்து வைத்து கொள்ள வேண்டும். அவசர தேவைக்கு, https://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து, லாரி குடிநீர் பெற்றுக் கொள்ளலாம்.
இணைப்பு இல்லாத மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளில், லாரி குடிநீர் வழங்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.
