/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' டார்கெட் ' டால் புலம்பும் போக்குவரத்து போலீசார்!
/
' டார்கெட் ' டால் புலம்பும் போக்குவரத்து போலீசார்!
' டார்கெட் ' டால் புலம்பும் போக்குவரத்து போலீசார்!
' டார்கெட் ' டால் புலம்பும் போக்குவரத்து போலீசார்!
PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

''சிறுபான்மையினர்ஓட்டுகளுக்கு குறி வைக்கிறாருங்க...'' என்றபடியே, நண்பர்கள்மத்தியில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யாரை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தி.மு.க., கூட்டணியில் இருக்கிற, இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவரான எஸ்றா சற்குணம், சமீபத்துல காலமானாரே... அவருக்கு அஞ்சலி செலுத்த, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நினைச்சிருக்காருங்க...
''ஆனா, அவர் வெளியூர்ல இருந்ததால,வர முடியலையாம்... இதனால, தன் கட்சி பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளை அஞ்சலி செலுத்த அனுப்பி வச்சிருக்காருங்க...
''பொதுவா, 'கிறிஸ்துவ, முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த ஓட்டு வங்கி, எப்பவுமே தி.மு.க., கூட்டணிக்கு தான் சாதகமா இருக்குது... 2026 சட்டசபை தேர்தல்ல, இதை தன் கட்சிக்கு திருப்ப விஜய் திட்டமிட்டிருக்காருங்க... அதன் முதல் கட்டம் தான், எஸ்றா சற்குணத்துக்கு செலுத்திய அஞ்சலி'ன்னுஅவரது கட்சியினர் சொல்றாங்க...'' என்றார்,அந்தோணிசாமி.
''மாஜிக்கு வேண்டியவா, திரும்பி வந்துண்டு இருக்கா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு தடம் மாறினார் குப்பண்ணா.
''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கோவை மாநகராட்சியில், அ.தி.மு.க., 'மாஜி'அமைச்சர் வேலுமணிக்குநெருக்கமான அதிகாரிகள்பலர் இருந்தா... தி.மு.க., ஆட்சிக்கு வந்ததுமே, அவாளை வேற வேற மாநகராட்சிகளுக்கு துாக்கி அடிச்சுட்டா ஓய்...
''தி.மு.க., ஆட்சிக்கு வந்து மூணு வருஷம் முடிஞ்சுட்டதால, வேற ஊர்களுக்கு போனவா, பார்க்க வேண்டியவாளை பார்த்து, 'கவனிச்சு' மறுபடியும் கோவைக்கே மாறுதல் வாங்கி வந்துண்டு இருக்கா ஓய்...
''இதுவரை ரெண்டு உதவி கமிஷனர்கள், ஒரு உதவி நகரமைப்பு அலுவலர்னு மூணு அதிகாரிகள், கோவைக்கு வந்துட்டா... இன்னும் ஒரு துணை கமிஷனர், ஒரு உதவி கமிஷனர் பணியிடம் காலியா இருக்கறதால, மத்தவாளும் இந்த இடங்களுக்கு வர்றதுக்கு, 'மூவ்' பண்ணிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''உயர் அதிகாரிகள், 'டார்கெட்' வச்சிருக்கிறதால, நொந்து போயிருக்காவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலககட்டுப்பாட்டுல, 55 போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள்இருக்கு... இதுல, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள், போலீசார்னு 2,200க்கும் மேற்பட்டவங்க வேலையில இருக்காவ வே...
''இவங்க, தினசரி போக்குவரத்தை ஒழுங்குபடுத்துறது, போக்குவரத்து விதிமீறல்கள் மீது நடவடிக்கைஎடுக்கிறது, முதல்வர், கவர்னர்னு முக்கிய பிரமுகர்கள் போற வழிகள்ல பாதுகாப்பு பணியில ஈடுபடுறதுன்னுநிறைய வேலைகளை பார்க்காவ... இப்ப, இவங்களுக்கு, 'நாள் ஒன்றுக்கு போக்குவரத்து விதிமீறலுக்கு, 75 வழக்கும், மதுபோதையில் வாகனம் ஒட்டியதா ரெண்டு வழக்கும் போடணும்'னு, உயர் அதிகாரிகள் இலக்கு நிர்ணயம் பண்ணியிருக்காவ வே...
''அதுவும் இல்லாம, இந்த வழக்குகளில் சிக்கும் வாகன ஓட்டிகளிடம், 'உடனே அபராத தொகையை, 'டிஜிட்டல்' முறையில கறாரா வசூல் பண்ணிடணும்'னும் சொல்லியிருக்காவ... 'ஏற்கனவேஇருக்கிற வேலை பளு பத்தாதுன்னு, இது வேறயா'ன்னு போக்குவரத்து போலீசார் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.