/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மழைநீரை அகற்றிய போக்குவரத்து போலீஸ்
/
மழைநீரை அகற்றிய போக்குவரத்து போலீஸ்
PUBLISHED ON : டிச 04, 2025 02:15 AM

திருமங்கலம்: திருமங்கலம், கீழ்ப்பாக்கம் பகுதியில் போக்குவரத்திற்கு இடையூறாக பிரதான சாலைகளில் தேங்கிய மழைநீரை போக்குவரத்து போலீஸ்காரர் அகற்றினார்.
தொடர் கனமழையால், நகரின் பிரதான சாலைகளில் மழைநீர் தேங்கி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
குறிப்பாக, திருமங்கலம் - பாடி செல்லும் 100 அடி சாலையில், நேற்று முன்தினம் இரவு வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெள்ளம் போல் தேங்கியது.
அப்போது, அங்கு பணியில் இருந்த, அண்ணா நகர் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் நரேஷ், தன் கையால் வடிகால் அடைப்பை அகற்றி, மழைநீரை முழுதும் வடிய செய்தார். அதேபோல், கீழ்ப்பாக்கம் ஆம்ஸ் சாலை, பொன்னியம்மன் கோவில் தெருவின் பிரதான சாலையில் தேங்கிய நீரை, மாநகராட்சி ஊழியருடன் இணைந்து போலீசார் அகற்றினர்.

