/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
திருச்சி நுாலகத்திற்கு காமராஜர் பெயர்: முதல்வர்
/
திருச்சி நுாலகத்திற்கு காமராஜர் பெயர்: முதல்வர்
PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM
சென்னை:சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:
சென்னை கோட்டூர்புரம் நுாலகத்திற்கு, அண்ணா நுாற்றாண்டு நுாலகம் என, பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
மதுரையில் கலைஞர் நுாற்றாண்டு நுாலகம் கட்டப்படும் என அறிவித்து, ஒரே ஆண்டில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
கோவையில் நுாலகம் அமைக்க பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல, திருச்சி நுாலகத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. கோவையில் பெரியார் பெயரில் நுாலகம் அமைக்கப்பட உள்ளது.
திருச்சி நுாலகத்திற்கு காமராஜர் பெயரை சூட்டுவது பொருத்தமாக இருக்கும். எனவே, அந்த நுாலகத்திற்கு காமராஜர் பெயரை சூட்டுவதற்கான அரசாணையை, பள்ளி கல்வித் துறை அமைச்சர் வெளியிட வேண்டும்.