/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மாநகராட்சி ஊழியரிடம் வழிப்பறி: இருவர் கைது
/
மாநகராட்சி ஊழியரிடம் வழிப்பறி: இருவர் கைது
PUBLISHED ON : ஆக 12, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னைமெரினாவில் மாநகராட்சி ஊழியரை தாக்கி, பணம் பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
பொழிச்சலுார், விநாயகர் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 56; மாநகராட்சி ஊழியர்.
கடந்த 9ம் தேதி இரவு மெரினாவில் உள்ள, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகம் எதிரே மணற்பரப்பில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அங்கு வந்த மர்ம நபர்கள் அவரை தாக்கி, சட்டை பையில் வைத்திருந்த 1,200 ரூபாயை பறித்துச் சென்றனர். மெரினா போலீசாரின் விசாரணையில், சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த தனுஷ், 19, மணிகண்டன், 20, ஆகியோர் பணம் பறித்தது தெரியவந்தது. இருவரையும் நேற்று கைது செய்த போலீசார், 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.