/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மொபைல் போன் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது
/
மொபைல் போன் பறித்த சிறுவன் உட்பட இருவர் கைது
PUBLISHED ON : மே 11, 2025 12:00 AM

ஏழு கிணறு, பீஹாரைச் சேர்ந்தவர் ஆரிப், 19, சென்னையில் உள்ள தனியார் கார் நிறுவனத்தில் பணி புரிகிறார். 8ம் தேதி, ஏழு கிணறு, குப்பையர் தெரு மார்க்கெட் தெருவில், மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, டூ - வீலரில் வந்த மூன்று பேர், ஆரிப்பை மிரட்டி, மொபைல் போன் மற்றும் 500 ரூபாயை பறித்து தப்பியோடினர். இது குறித்து, ஏழுகிணறு போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், மொபைல் போன் பறிப்பில் தொடர்புடைய, காசிமேடைச் சேர்ந்த அபினேஷ், 19, மற்றும் சிறுவன் ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து, டூ - வீலர் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்கு பின், அபினேஷ் சிறையிலும், சிறுவன் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர். தலைமறைவான மற்றொருவரை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.