தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ பேராசிரியர்களை மிரட்டி வசூல் செய்யும் பல்கலை அதிகாரி!

 பேராசிரியர்களை மிரட்டி வசூல் செய்யும் பல்கலை அதிகாரி!

 பேராசிரியர்களை மிரட்டி வசூல் செய்யும் பல்கலை அதிகாரி!


PUBLISHED ON : மே 13, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2026 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ ஞ்சில் அமர்ந்த உடன், “ஆய்வு என்ற பெயர்ல, ஊர் சுத்திட்டு போயிட்டாங்க பா...” என, பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

“எந்த ஊர் விவகாரமுங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.

“நீலகிரி மாவட்டம், கூடலுார் வனக்கோட்டத்தில் சமீபத்துல காட்டுத்தீ பரவி, ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி எரிஞ்சு போயிடுச்சு... தீயை அணைக்க ரொம்பவே சிரமப்பட்டாங்க...

“கோவை, சூலுார் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டரை வரவழைச்சு, மாயாற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைச்சாங்க... பிற மாவட்ட வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள்னு, 500க்கும் மேற்பட்டவங்க இந்த பணியில் ஈடுபட்டாங்க பா...

“இந்த பணிகளை ஆய்வு செய்ய, துறையின் பெண் அதிகாரி, சென்னையில இருந்து வந்திருந்தாங்க... அவங்களுடன் வேற சில அதிகாரிகளும் வந்திருந்தாங்க...

“வந்தவங்க, பேருக்கு ஆய்வு பண்ணிட்டு, 'டிரெக்கிங்' என்ற மலையேற்ற பயிற்சிக்கு போயிட்டாங்க... 'நாங்க உயிரை கொடுத்து வேலை செஞ்சிட்டு இருந்தப்ப, அதிகாரிகள் டிரெக்கிங் போனது நியாயமா'ன்னு வனத்துறையினர் புலம்புறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.

“சுப்ரியா சாஹு மேடம்... நாளைக்கு பேசறேன்...” என, மொபைல் போனை, 'ஆப்' செய்தபடியே வந்த குப்பண்ணா, “அரசு அதிகாரிகள் பலரும் நிம்மதியா இருக்கா ஓய்...” என்றார்.

“எதுக்கு வே...” என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.

“சட்டசபை தேர்தல்ல தி.மு.க., தோற்று போனதுல, அதிகாரிகள் பலருக்கு ரொம்பவே நிம்மதி... ஏன்னா, கடந்த ஆட்சியில் பல துறைகள்ல பெரிய அளவுல ஊழல்கள் நடந்திருக்கு ஓய்...

“குறிப்பா, உள்ளாட்சி, பத்திரப்பதிவு, நெடுஞ்சாலை மற்றும், 'டாஸ்மாக்'னு பணம் கொழிக்கும் துறைகள்ல இருந்த மாவட்ட அதிகாரிகள், துறையின் மேலிடத்துக்கு மாசா மாசம் கப்பம் கட்டியிருக்கா... இதனால, அவா எல்லாம் கடும் மன உளைச்சல்ல இருந்தா ஓய்...

“மறுபடியும் தி.மு.க.,வே ஆட்சிக்கு வந்துட்டா, தேர்தல்ல செலவு செய்ததை எல்லாம் திருப்பி எடுக்கணும்னு கூடுதலா கப்பம் கேட்பாளே... எப்படி சமாளிக்கறதுன்னு அதிகாரிகள் பயந்துண்டு இருந்தாளாம் ஓய்...

''இப்ப, தி.மு.க., ஆட்சி முடிவுக்கு வந்துட்டதால, அதிகாரிகள் எல்லாம் நிம்மதியா இருக்கா... 'விஜய் ஆட்சியாவது இந்த கமிஷன் கலாசாரத்தை ஒழிக்கணும்'னு அவா எல்லாம் சொல்றா ஓய்...” என்றார், குப்பண்ணா.

“பல்கலையில நடக்கிற ஊழலை கேளுங்க...” என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

“திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு உட்பட்ட தனியார் கல்லுாரி பேராசிரியர்களுக்கு, அவங்களின் கல்வி தகுதியை உறுதி பண்ற, 'குவாலிபிகேஷன் அப்ரூவல் சர்டிபிகேட்'டை பல்கலையில் வழங்குறாங்க... இதுக்காக, ஒவ்வொரு பேராசிரியரையும் பல்கலை அதிகாரி ஒருவர் அழைச்சு, லட்சக்கணக்குல பணம் வசூலிக்கிறாருங்க...

“இது சம்பந்தமா, துாத்துக்குடி காமராஜ் கல்லுாரி செயலர் சோமு, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகாரே அனுப்பினாரு... ஆனா, அந்த புகாரை பல்கலை துணைவேந்தருக்கே அனுப்பிட்டு, லஞ்ச ஒழிப்பு போலீசார் கம்முனு இருந்துட்டாங்க...

“சீக்கிரமே ஓய்வுல போக இருக்கிற அந்த அதிகாரி, முடிஞ்ச வரைக்கும் லாபம்னு பேராசிரியர்களை மிரட்டி, இதுவரை பல கோடி ரூபாயை சம்பாதிச்சிட்டார்னு சொல்றாங்க...” என முடித்த அந்தோணி சாமியே, “சாக்ரடீஸ் இப்படி உ ட்காருங்க... நாங்க கிளம்புறோம்...” என்றபடி எழ , மற்ற வர்களும் கி ளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us