தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ சிவகங்கையில் நாளை  நடைபயிற்சி முகாம்  

 சிவகங்கையில் நாளை  நடைபயிற்சி முகாம்  

 சிவகங்கையில் நாளை  நடைபயிற்சி முகாம்  


PUBLISHED ON : மார் 12, 2026 05:23 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 12, 2026 05:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை 'நடப்போம் நலம் பெறுவோம்' திட்ட நடைபயிற்சி நடக்கிறது என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில், நடைபயிற்சி திட்டம் செயல்படுகிறது. கலெக்டர் அலுவலக வளாகம், அழகப்பா பல்கலை வளாகத்தில் தலா 8 கி.மீ., துாரத்திற்கு நடை பயிற்சி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இத்தளத்தில் மாதத்தின் முதல் ஞாயிறன்று ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் குறித்த பரிசோதனை முகாம் நடத்தப்படும். தினமும் 30 நிமிடம் என வாரத்தில் 5 நாட்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அந்த வகையில் நாளை (மார்ச் 13) சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் காலை 6:00 மணிக்கு நடைபயிற்சி முகாம் துவக்க விழா நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் பங்கேற்று நடைபயிற்சி மேற்கொள்ளலாம் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us