/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பணிகளை இழுத்தடிக்கும் கான்ட்ராக்டர்களுக்கு எச்சரிக்கை!
/
பணிகளை இழுத்தடிக்கும் கான்ட்ராக்டர்களுக்கு எச்சரிக்கை!
பணிகளை இழுத்தடிக்கும் கான்ட்ராக்டர்களுக்கு எச்சரிக்கை!
பணிகளை இழுத்தடிக்கும் கான்ட்ராக்டர்களுக்கு எச்சரிக்கை!
PUBLISHED ON : ஜன 18, 2026 03:35 AM

இஞ்சி டீயை உறிஞ்சிய படியே , ''பதவி உயர்வுல பு குந்து விளையாடுறாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம் பித்தார் அந்தோணிசாமி.
''எந்த துறையில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகளின்படி, சென்னை போன்ற பெருநகர மாநகராட்சிகள் ல, உதவி செயற்பொறியாளர்கள் அஞ்சு வருஷம் வேலை செய்திருந்தா, அவங்களுக்கு செயற்பொறியாளர் பதவி உயர்வு தரணும்... ஆனா, இந்த விதியில், '395 ஏ' என்ற ஒரு பிரிவை புதுசா புகுத்தி, பணியில் சேர்ந்து, ஏழு மாசம் ஆனவங்களுக்கே பதவி உயர்வு குடுக்கிறாங்க...
''சும்மா ஒண்ணும் தர்றது இல்ல... 'வாங்க' வேண்டியதை வாங்கிட்டு தான் குடுக்கிறாங்க... இதனால, பதவி உயர்வு கிடைக்காம பாதிக்கப்பட்டவங்க, நீதிமன்றத்துல வழக்கு போட்டிருக்காங்க...
''இப்ப, தேர்தல் தேதியை அறிவிக்கிறதுக்கு முன்னாடி, இந்த விதிப்படி தமிழகம் முழுக்க இன்னும் நிறைய உதவி செயற்பொறியாளர்களுக்கு, செயற்பொறியாளர் பதவி உயர்வு குடுத்து, பெரும் தொகையை திரட்ட முடிவு பண்ணியிருக்காங்க... இதனால, வழக்கு போட்டவங்களிடம், அதை வாபஸ் வாங்குங்கன்னு, துறையின் மேலிடத்துல இருந்து மிரட்டுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''வேலையை குடுத்துட்டு, பணத்தை தராம இழுத்தடிக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தமிழக வனத் துறைக்கு, 200 ஆண்டுகள் பாரம்பரியம் இருக்கு... இதனால, ஏகப்பட்ட ஆவணங்கள் இத்துறை யில் இருக்கு... இவற்றை எல்லாம் டிஜிட்டல் ஆவணங்களா மாத்தி, தனி இணையதளத்தை உருவாக்கியிருக்கா ஓய்.. .
''இந்த இணையதளத்தை, சமீபத்தில், துணை முதல்வர் உதயநிதி துவக்கி வச்சாரு... இன்னும் பல லட்சம் பக்கங்களை இதுல பதிவேற்றம் பண்ற பணிகள் நடக்கறது ஓய்...
''இந்த வேலையை, தமிழ் இணைய கல்விக் கழகத்திடம் ஒப்படைச்சிருக்கா... இதுக்காக, 2 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கியிருக்கா... இதுக்காக, தமிழ் இணைய கல்விக் கழக ஊழியர்கள், ஆறு மாசமா வேலை செய்தும், இதுவரைக்கும் ஒரு ரூபாய் கூட அவங்களுக்கு குடுக்கல ஓய்...
''அங்க வேலை செய்கிற யாரும் அரசு ஊழியர்கள் இல்ல... எல்லாருமே ஒப்பந்த ஊழியர்கள் தான்... 'துணை முதல்வர் துவக்கி வச்ச திட்டத்துலயே சம்பளம் தராம குளறுபடி பண்ணா எப்படி'ன்னு அவாள்லாம் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''டெண்டர்களை ஒரே கையெழுத்துல ர த்து பண்ணிருவோம்னு கண்டிச்சிருக்காரு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''விழுப்புரம் மாவட்ட அளவில் நடக்கிற வளர்ச்சி பணிகளை செய்ற கான்ட்ராக்டர்களுடன், சமீபத்தில் கூடுதல் கலெக்டர் ஆலோசனை நடத்தினாரு... அப்ப, மாவட்ட தி.மு.க., முக்கிய புள்ளிக்கு நெருக்கமான, ஆளுங்கட்சி ஒன்றிய செயலரின், 'பினாமி' கான்ட்ராக்டர், 30க்கும் மேற்பட்ட வேலைகளை இன்னும் துவக்காமலே இருந்தது தெரிஞ்சிருக்கு வே...
''இதனால, 'தேர்தல் தேதி அறிவிக்கிறதுக்குள்ள எல்லா பணி களையும் சீக்கிரமா செஞ்சி முடிக்கணும்... சம்பந்தப்பட்ட அதிகாரி களும், கான்ட்ராக்டர் களை விரட்டி வேலை வாங்கணும்... வேலையை இழுத்தடிச்சா, யாரா இருந்தாலும் கொடுத்த டெண்டர்களை ரத்து பண்ணிருவோம்'னு கூடுதல் கலெக்டர் கண்டிப்பா சொல்லிட்டாரு வே...
''இதை கேட்ட கான்ட்ராக்டர்களும், அதிகாரிகளும் வெலவெலத்து போய், 'சீக்கிரமே பணிகளை முடிச்சிடுதோம்'னு சொல்லிட்டு போயிருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''ராஜா வர்றாரு... இஞ்சி டீ குடுங்க...'' என்றபடியே அந்தோணி சாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

