உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஜன 07, 2025 12:00 AM
அ நிறம் | அளவு
பாலதண்டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாணம்
கெங்கவல்லி, கெங்கவல்லி, பாலதண்டாயுதபாணி கோவிலில், திருக்கல்யாணம் மற்றும் மாலை அணியும் நிகழ்ச்சி நடந்தது.
கெங்கவல்லியில், பாலதண்டாயுதபாணி கோவில் உள்ளது. 42வது ஆண்டு முருக பக்தர்கள் மாலை அணியும் விழா மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக, இரண்டு லட்சம் ரூபாயில் ஐம்பொன் மயில் வாகன சிலையை, கோவிலுக்கு வழங்கினர். தொடர்ந்து வள்ளி, தெய்வானையுடன், பாலதண்டாயுதபாணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. அப்போது ஏராளமான பெண்கள், வீட்டு சீர்வரிசை பொருட்கள் எடுத்து வந்து, சுவாமி தரிசனம் செய்தனர். அதன்பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
