/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தக்கைப்பூண்டு விதைகள் கிடைக்காமல் ஆந்திராவிற்கு பயணிக்கும் விவசாயிகள் வேளாண் துறை நடவடிக்கை எடுக்குமா?

PUBLISHED ON : ஜூலை 15, 2025 12:00 AM

பொன்னேரி,
சம்பா பருவத்திற்கு தயாராகும் விவசாயிகள், மண் வளத்தை காக்கும் தக்கைப்பூண்டு செடிகளை வளர்ப்பதற்கான விதைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
மீஞ்சூர் வட்டத்தில் சம்பா, சொர்ணவாரி பருவங்களில், 40,000 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிடப்படுகிறது.
ஒவ்வொரு பருவத்திற்கு முன், மண்ணின் வளத்தை காக்கும் தழைச்சத்து பயிரான தக்கைப்பூண்டு விதைக்கப்படுகிறது.
இவை விளைநிலங்களில் விதைக்கப்பட்டு, 40 - 45 நாட்களில் செடிகளாக வளரும் போது, அவை மண்ணுடன் சேர்ந்து உழுவு செய்யப்படுகிறது.
இதன் வாயிலாக, மண் வளத்தை அதிகரித்து, ரசாயன உரங்களின் தேவையை வெகுவாக குறைக்கிறது.
இதற்காக, விவசாயிகளுக்கு வேளாண் துறை வாயிலாக, 1 கிலோ, 60 ரூபாய் என, மானிய விலையில் தக்கைப்பூண்டு விதைகள் வழங்கப்படுகிறது. 1 ஏக்கருக்கு, 8 கிலோ விதைகள் தேவைப்படுகிறது.
தற்போது, சம்பா பருவத்திற்கு தயாராகி வரும் விவசாயிகள், தக்கைப்பூண்டு விதைக்க திட்டமிட்டு உள்ளனர். அதேசமயம், அதற்கான விதைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். வெளிசந்தையிலும் விதைகள் கிடைக்காத நிலையில், ஆந்திர மாநிலத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
தக்கைப்பூண்டு விதைகளை விதைத்து, மண் வளத்தை காக்க வேண்டும் எனக்கூறும் வேளாண் துறை அதிகாரிகள், அதற்கான விதைகளை இருப்பு வைத்துக் கொள்வதில்லை. இந்த மாதத்திற்குள் விதைத்தால் தான், சம்பா பருவத்திற்கு உழவு பணிகளின்போது, அவற்றை மண்ணுடன் உழுது, விவசாய பணிகளை துவக்க முடியும்.
ஆந்திர மாநிலத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், தக்கைப்பூண்டு விதைகள் வழங்கப்படுகிறது.
அதேபோல, இங்குள்ள வேளாண் துறை மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களில், மானிய விலையில் விதைகள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.