/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை அகற்றப்படுமா?
/
நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை அகற்றப்படுமா?
நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை அகற்றப்படுமா?
நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள வழிகாட்டி பலகை அகற்றப்படுமா?
PUBLISHED ON : மே 20, 2025 12:00 AM

உத்திரமேரூர்,
உத்திரமேரூரில், காஞ்சிபுரம் சாலை, செங்கல்பட்டு சாலை, வந்தவாசி சாலை, எல்.எண்டத்தூர் சாலை ஆகிய பிரதான சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன.
அவ்வாறு செல்லும் வாகனங்கள் எந்தவித குழப்பமும் இல்லாமல் செல்வதற்கு, உத்திரமேரூரில் நெடுஞ்சாலை துறை சார்பில் பிரதான சாலைகளில் வாகன வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கல்பட்டு சாலையில் உள்ள இரட்டைதாலீஸ்வரர் கோவில் அருகே, வாகன வழிகாட்டி பலகை அமைக்கப்பட்டிருந்தது. இந்த வழிகாட்டி பலகை சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த தேர்த் திருவிழாவை முன்னிட்டு அகற்றப்பட்டது.
அவ்வாறு அகற்றப்பட்ட வழிகாட்டி பலகை கல்வெட்டு கோவில் அருகே உள்ள நடைபாதையில் வைக்கப்பட்டு உள்ளது. தற்போது, தேர்த் திருவிழா முடிந்து 10 நாட்கள் ஆகியும் வாகன வழிகாட்டி பலகை மீண்டும் பொருத்தப்படாமல் உள்ளது.
இதனால், நடைபாதையில் நடந்து செல்லும் பாதசாரிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே, நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள வாகன வழிகாட்டி பலகையை அகற்ற, பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.