தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கருவூலங்களில் 'கட்டிங்' வசூலுக்கு கடிவாளம் வருமா?

 கருவூலங்களில் 'கட்டிங்' வசூலுக்கு கடிவாளம் வருமா?

 கருவூலங்களில் 'கட்டிங்' வசூலுக்கு கடிவாளம் வருமா?

4


PUBLISHED ON : செப் 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 30, 2026 12:00 AM

4


4
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“ஓய்வூதிய பலன்கள் கிடைக்காம தவிக்கறா ஓய்...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

“எந்த துறையில பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“அரசு போக்குவரத்து கழகங்கள்ல ஓய்வுபெறும் டிரைவர், கண்டக்டர் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு, ஓய்வுக்கான பண பலன்களை உடனே தர மாட்டேங்கறா... தி.மு.க., ஆட்சியில, 2025ம் ஆண்டு வரை ஓய்வுபெற்றவாளுக்கான பண பலன்களை குடுத்துட்டா ஓய்...

“ஆனா, இந்த வருஷத்தில் ஓய்வுபெற்ற நிறைய பேருக்கு, இன்னும் பண பலன்கள் கிடைக்கல... நிறைய போக்குவரத்து தொழிலாளர்கள், இந்த தொகையை நம்பி வீட்டுக்கடன், குழந்தைகளுக்கு கல்விக்கடன், திருமணக் கடன்னு வாங்கி வச்சிருக்கா ஓய்...

“இதனால, 'பண பலன்கள் கிடைச்சா, கடன்களை அடைச்சிட்டு நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா முடியலையே... வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே வாழ்க்கை முடிஞ்சிடுமோன்னு பயமா இருக்கு... பண பலன்களை வழங்க, போக்குவரத்து துறை அமைச்சரும், செயலரும் நடவடிக்கை எடுக்கணும்'னு கேக்கறா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“பேராசிரியர் மீது அடுக்கடுக்கா புகார்கள் குவியுதுங்க...” என்றார் அந்தோணிசாமி.

“எந்த ஊர்ல ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.

“கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியின், இயந்திரவியல் துறையில் ஒரு பேராசிரியர் இருக்காரு... இவருக்கு, கல்லுாரிக்கு பக்கத்துலயே வீடு இருந்தும், விடுதி கண்காணிப்பாளரா இருக்கிறதை பயன்படுத்தி, கல்லுாரி வளாக குடியிருப்பை பல வருஷங்களா பயன்படுத்திட்டு இருந்தாருங்க...

“கல்லுாரி விடுதிக்கு மளிகை சாமான்கள், பால், காய்கறி, இறைச்சி, கட்டில், மெத்தைகள் வாங்குறதுல நிறைய முறைகேடுகள் பண்ணியிருக்காராம்... கல்லுாரிக்கு எதிர்ல, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை ஒரே, 'செக்' குடுத்து வாங்கியிருக்காரு... இதுக்கு, தன் துறையிடம் எந்த அனுமதியும் வாங்கலைங்க...

“இவரை பத்தி தொழில்நுட்ப கல்வி கமிஷனருக்கு புகார் போக, அவர் உத்தரவுப்படி, கல்லுாரி வளாக குடியிருப்பில் இருந்து இவரை காலி பண்ணிட்டாங்க... அதேபோல, 'இவர் மீதான மத்த புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கணும்'னு, கல்லுாரி ஊழியர்கள் வலியுறுத்திட்டு இருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.

“நந்தகுமார், இரும் சேர்ந்து போலாம்...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே, “கருவூலம் பக்கம் வர மாட்டாங்களான்னு புலம்புதாவ வே...” என்றபடியே தொடர்ந்தார்...

“த.வெ.க., ஆட்சிக்கு வந்ததும், தமிழகம் முழுக்க அரசு அலுவலகங்கள்ல லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனைகள் நடத்துதாங்கல்லா... இதுல சிலர் சிக்கினாலும், இதுக்கு பயந்தே, பல இடங்கள்ல லஞ்சம் வாங்குறது குறைஞ்சிட்டு வே...

“ஆனா, கருவூல துறையில மட்டும் லஞ்ச புழக்கம் இன்னும் குறையல... அதாவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், 'சரண்டர்' விடுப்பு, பி.எப்., தொகைன்னு எந்த விண்ணப்பத்துடன் கருவூலங்களுக்கு போனாலும், அங்க குறைஞ்சது 1,000 துவங்கி, 5,000 ரூபாய் வரை, 'கட்டிங்' கேட்காவ வே...

“யாராவது தர மறுத்தா, அது சம்பந்தமான விண்ணப்பத்துல ஏதாவது விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிடுதாவ... இதனால, பாதிக்கப்பட்ட ஊழியர்கள் எல்லாம், 'கருவூலம் பக்கமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பார்வையை திருப்பினா நல்லாயிருக்கும்'னு, புலம்புதாவ வே...” என முடித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us