/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
'போதை'யில் காரை தாறுமாறாக ஓட்டி பெண் உயிர் பறிப்பு
/
'போதை'யில் காரை தாறுமாறாக ஓட்டி பெண் உயிர் பறிப்பு
'போதை'யில் காரை தாறுமாறாக ஓட்டி பெண் உயிர் பறிப்பு
'போதை'யில் காரை தாறுமாறாக ஓட்டி பெண் உயிர் பறிப்பு
PUBLISHED ON : நவ 30, 2025 02:25 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, அங்கண்ணன் தெருவை சேர்ந்தவர் விமலா, 38. சேலத்தில் உள்ள தனியார் துணி ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்தார். கணவர் இறந்த நிலையில், இரு மகன்களுடன் வசித்தார். நேற்று மாலை, பணி முடிந்து ஹெல்மெட் அணிந்து, 'ஜெஸ்ட்' மொபட்டில், பனமரத்துப்பட்டி நோக்கி விமலா சென்றுகொண்டிருந்தார்.
மாலை, 6:00 மணிக்கு, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, கந்தபிள்ளையார் கோவில் அருகே சென்றபோது, எதிரே அதிவேகமாக வந்த, 'வோக்ஸ்வாகன்' கார் கட்டுப்பாட்டை இழந்து, மொபட் மீது மோதியது. அதில் சம்பவ இடத்தில் விமலா உயிரிழந்தார். அந்த கார், தொடர்ந்து எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதியது. அதில் வந்த இருவர், காயங்களுடன் உயிர் தப்பினர்.
மேலும் அந்த கார், வேகமாக வட்டமடித்தபடி, சாலையோரம் இருந்த ஒரு வீட்டின் வாகன நிறுத்துமிடத்தின் இரும்பு கேட்டை உடைத்துக்கொண்டு, சுவரில் சொருகி நின்றது. 'போதை'யில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய, வெள்ளாளகுண்டத்தை சேர்ந்த, விக்னேஷ் கண்ணன், 27, என்பவரை பிடித்து, மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

