/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பங்குச்சந்தை ஆசையில் ரூ.33,000 இழந்த பெண்
/
பங்குச்சந்தை ஆசையில் ரூ.33,000 இழந்த பெண்
PUBLISHED ON : ஏப் 30, 2025 12:00 AM
சென்னை,
ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், அதே பகுதியில் 'போட்டிக்' கடை நடத்தி வருகிறார்.
அவரது டெலிகிராம் பக்கத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து, வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என்ற ஆசையில், அதில் குறிப்பிடப்பட்டிருந்த 'லிங்க்'கின் உள்ளே சென்றுள்ளார்.
இதையடுத்து, அவரை தொடர்பு கொண்ட நபர், 'மெட்லைன் 76' என்ற மொபைல் போன் செயலியை பதிவிறக்கம் செய்ய வலியுறுத்தி உள்ளார்.
தொடர்ந்து சில பங்குகளை வாங்கினால், அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய அப்பெண், 33,770 ரூபாய்க்கு பங்குகள் வாங்கியுள்ளார்.
முதலில், 3,200 ரூபாய் 'போனஸ்' தொகையை வழங்கிய நபர், இரண்டாவது முறை போனஸ் தொகை எதுவும் வழங்கவில்லை.
இது குறித்து ஆன்லைனில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட பெண், சம்பந்தப்பட்ட நபரிடம் கேட்டபோது எந்தவித பதில் அளிக்காமல் துண்டித்துள்ளார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

