/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
/
கஞ்சா விற்ற வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
PUBLISHED ON : நவ 26, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்: கஞ்சா விற்பனை செய்த வாலிபர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
காஞ்சிபுரம் சதாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி, 24. காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கஞ்சா விற்பனை செய்ததாக சமீபத்தில் இவர் கைது செய்யப்பட்டார். இவரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி உத்தரவிட்டதை தொடர்ந்து, வேலுார் சிறையில் உள்ள கணபதியிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை, போலீசார் நேற்றுமுன்தினம் வழங்கினர்.

