
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரிய முட்டை
தரையில் வாழும் உயிரினங்களில் பெரிய முட்டையிடுவது நெருப்புக்கோழி. முட்டையின் எடை 1.36 கிலோ. இது நெருப்புக்கோழியின் மொத்த எடையில்2 சதவீதம் தான். முட்டையின் நீளம் 15.24 செ.மீ. முட்டையை குஞ்சு பொறிக்க 42 நாட்கள் ஆகும். நெருப்புக்கோழியில் இரு வகை உள்ளது. இது பறக்க இயலாது. தரையில் வேகமாக ஓடும் பறவை இதுவே. இதன் பூர்வீகம் ஆப்ரிக்கா. நெருப்புக்கும் இதற்கும்
சம்பந்தம் இல்லை. வெப்ப பிரதேசத்தில் தாக்குப்பிடிக்கும் உடலமைப்பு பெற்றுள்ளதால் இப்பெயர் வந்தது.உயரம் 6-9 அடி. ஆயுட்காலம் 30-40 ஆண்டு.

