
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுனாமி விழிப்புணர்வு தினம்
சுனாமியை முன்கூட்டியே அறிந்து நடவடிக்கை எடுப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தி ஐ.நா., சார்பில் நவ. 5ல் உலக சுனாமி விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. சுனாமி என்பது ஜப்பானிய மொழி சொல். இதற்கு 'துறைமுக அலை' எனப் பொருள். 'ஆழிப்பேரலை' எனவும் அழைக்கப்படுகிறது. கடலில் நிலநடுக்கம் ஏற்படும் போது சுனாமி உருவாகிறது. உலகில் 100 ஆண்டுகளில் 58 முறை சுனாமி ஏற்பட்டுள்ளது. இதில் 2.60 லட்சம் பேர் உயிரிழந்தனர். 2004ல் இந்தியா உள்ளிட்ட நாடுகளை தாக்கிய சுனாமியில் 2.27 லட்சம் பேர் பலியாகினர்.