PUBLISHED ON : டிச 05, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சர்வதேச மண் தினம்
மண்ணில் ரசாயனம், பிளாஸ்டிக் கழிவுகள், விளை நிலங்களில் ரசாயன பூச்சிக்கொல்லி என பல காரணங்களால் மண் வளம் தொடர்ந்து பாதிக்கிறது. அதிக விளைச்சல் பெறுவதற்காக ரசாயன உரம், பூச்சிக்கொல்லி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் மண் மலடாகி, அதிலுள்ள உயிர்த்தன்மை அழிந்து வருகிறது. இயற்கையின் அங்கமான மண்ணின் மகத்துவத்தை அறிந்து கொள்ளுதல், மண் வளத்தை பாதுகாக்க வலியுறுத்தி டிச. 5ல் சர்வதேச மண் தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகில் 83.3 கோடி ஹெக்டேர் மண் பகுதி, உப்பு பாதித்துள்ளது. இது பூமியில் 8.7 சதவீதம்.