
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய 'ஸ்டார்ட் அப்' தினம்
'ஸ்டார்ட் அப்' நிறுவனம் தொடங்குவதை எளிமையாக்குதல், வங்கிக்கடன், வரி சலுகை வழங்குதல் போன்றவற்றின் வாயிலாக நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 2016 ஜன. 16ல் 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தில் 1.58 லட்சம் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் விதமாக 2021 முதல் மத்திய அரசு சார்பில் ஜன. 16ல் 'தேசிய ஸ்டார்ட் அப்' தினம் கடைபிடிக்கப்படுகிறது.