
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமெரிக்க அதிபரின் 'மேஜை'
 
அமெரிக்காவின் 47வது அதிபராகியுள்ளார் டிரம்ப். அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான  வெள்ளை மாளிகையில் பயன்படுத்தப்படும் 'மேஜை' பிரபலமானது. இதன் உயரம் 2.72 அடி.  அகலம் 6 அடி. எடை 590 கிலோ. இதை 1880ல்  பிரிட்டன் இளவரசி விக்டோரியா, 19வது அமெரிக்க அதிபர் ரூதர்போர்டிடம் அன்பளிப்பாக வழங்கினார். இது பிரிட்டனின் 'எச்.எம்.ரெசொல்யூட்' எனும் மூழ்கிய  கப்பலின் உடைந்த பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது. 1963ல் அதிபர் ஜான் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்ட பின், இந்த மேஜை அகற்றப்பட்டது. பின் 1977ல் அதிபர் ஜிம்மி கார்டர் மீண்டும் கொண்டு வந்தார்.

