
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராணுவ தினம்
ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய ராணுவ தலைமை பொறுப்பு அவர்கள் வசம் தான் இருந்தது. 1949 ஜன., 15ல் இப்பொறுப்பை ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் 'கரியப்பா' ஏற்றார். இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாக ஜன. 15ல் ராணுவ
தினம் கொண்டாடப்படுகிறது. தன்னலம் பார்க்காமல் நாட்டை பாதுகாக்க எல்லையில் பணியாற்றும் நம் ராணுவ வீரர்கள் தான் தேசத்தின் உண்மையான ஹீரோக்கள். வெயில், குளிர், மழை, இரவு, பகல் என பார்க்காமல் மக்களுக்காக பணியாற்றும் ராணுவ வீரர்களை என்றும் போற்றுவோம்.