
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்களுக்கு பாதுகாப்பு
குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை உலகம் முழுவதும் நடக்கிறது. போர், வன்முறை, இயற்கை பேரிடர், மனிதாபிமான அவசரநிலைகளின் போது பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகின்றனர். உலகில் 20 வயதுக்குள்பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 12 கோடியாக உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் நவ.18ல் குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம், வன்கொடுமை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

