PUBLISHED ON : செப் 05, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
ஆசிரியர் தினம்
வாழ்க்கையில் உயர்வதற்கு கல்வியே சிறந்த வழி. மாணவர்களுக்கு கல்வி, நற்பண்புகளை கற்றுத்தரும்ஆசிரியர் பணி கடவுளுக்கு இணையானது என போற்றப்படுகிறது. ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில் தான் தீர்மானிக்கப்படுகிறது. தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்ட ஆசிரியரால் தான் சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த ராதாகிருஷ்ணன், ஆசிரியர் பணியில் ஈடுபாடு கொண்டவர். அவரது பிறந்த தினமான செப்.5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.