/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக சிங்க தினம்
/
தகவல் சுரங்கம் : உலக சிங்க தினம்
PUBLISHED ON : ஆக 10, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக சிங்க தினம்
'காடுகளின் ராஜா' என அழைக்கப்படும் சிங்கம், வீரத்தின் உதாரணமாகவும் விளங்குகிறது. சிங்கத்தின் வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆக. 10ல் உலக சிங்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்கா முழுவதும் சிங்கங்கள் வாழ்ந்தன. ஆனால் இன்று ஆப்ரிக்கா, ஆசியாவின் சில பகுதிகளில் மட்டுமே வாழ்கின்றன. முன்பு ஆப்ரிக்காவில் 2 லட்சம் சிங்கங்கள் இருந்தன. இன்று 20 ஆயிரம் மட்டுமே உள்ளன. இந்தியாவில் 2015ல் 523 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020ல் 674 என உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 113 சிங்கங்கள் உயிரிழந்தன.