PUBLISHED ON : ஆக 22, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
குளிர்ந்த மலர்
இந்தியா, இலங்கை, மியான்மரில் வஞ்சி மரங்கள் காணப்படுகின்றன. 33 அடி உயரம் வளரும். நாற்காலி, குடைகள் உள்ளிட்டவை தயாரிக்கப் பயன் படுகிறது. வஞ்சி மரம் பூக்கும் தன்மையுடையது. இது 'குளிர்ந்த மலர்களை உடைய மரம்' என அழைக்கப் படுகிறது. இதன் பூக்கள் 5 - 15 செ.மீ., இருக்கும். இது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. இதன் இலை, கொடி, வேர் மருத்துவக் குணமிக்கது. இதன் இலைகளின் நீளம் 60 செ.மீ., - 80 செ.மீ., இதற்கு சீந்தில்கொடி, ஆகாசவல்லி, அமிர்தவல்லி, சாகா மூலி என பல பெயர்கள் உண்டு.