உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 22, 2026 12:31 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
ஆசியாவின் பெரிய உயிரியல் பூங்கா
ஆந்திராவின் திருப்பதியில் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா, பரப்பளவு அடிப்படையில் ஆசியாவின் பெரிய விலங்குகள் பூங்கா என அழைக்கப்படுகிறது. பரப்பளவு 22.39 சதுர கி.மீ., இது 1987 செப்.,29-ல் உருவாக்கப்பட்டது. இங்கு மயில் ,கிளி, மைனா, வாத்து, பூதாரை உள்ளிட்ட 46 வகையான பறவைகள், 31 வகையான பாலூட்டிகள், 7 வகையான ஊர்வன உயிரினங்கள் சிங்கம், வெள்ளைபுலி, கரடி, யானை, நீர்யானை, மான், சிறுத்தை, உள்ளிட்ட பல வகை விலங்குகள் உள்ளன. இப்பூங்காவை ஆண்டுக்கு 7 லட்சம் சுற்றுலாபயணிகள் பார்வையிடுகின்றனர்.
