உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : அக் 19, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தொழிற்சாலை தீவிபத்து, எரிமலை வெடிப்பு, காட்டுத்தீ, போர் குண்டுவீச்சு உள்ளிட்ட சூழல்களில் 'கறுப்பு மழை' பெய்யும் வாய்ப்புள்ளது.
புகை, கரி, சாம்பல், காற்றில் மிதக்கும் பிற மாசுபடுத்திகள் வளிமண்டல ஈரப்பதத்துடன் கலந்து, பின் மழையாகத் தரையில் விழும்போது 'கறுப்பு மழை' ஏற்படுகிறது. துாய்மையான மழை நீருக்குப் பதிலாக இதில் கலந்துள்ள கார்பன் துகள், எரியாத ஹைட்ரோகார்பன், மாசுப்பொருட்கள் ஆகியவை இதற்கு கறுப்பு நிறத்தை அளிக்கின்றன. 1945ல் ஜப்பானின் ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்டபோது, கதிரியக்க கரி, சாம்பல் கலந்து கறுப்பு நிற மழை பெய்தது.
