உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஆக 31, 2026 12:00 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
ஆப்ரிக்க வம்சாவளியினர் தினம்
உலகில் ஆப்ரிக்க மக்களின் பங்களிப்பை அங்கீகரிப்பது, அவர்களுக்கு எதிரான இனவெறியை தடுக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஆக. 31ல் ஆப்ரிக்க வம்சாவளியினருக்கான சர்வதேச தினம் கடைபிடிக்கப் படுகிறது. ஆப்ரிக்க கண்டத்தில் மட்டுமல்லாமல், உலகின் பல நாடுகளிலும் ஆப்ரிக்க வம்சாவளியினர் வாழ்கின்றனர். இதில் அதிகமாக பிரேசிலில் 9 கோடி பேர், அடுத்து அமெரிக்காவில் 5 கோடி பேர், ஹைதியில் 1 கோடி பேர் வாழ்கின்றனர். 'ஆப்ரிக்க வம்சாவளியினரின் மனித உரிமைகளை விரிவுபடுத்துதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
