/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : தேசிய கடல்சார் தினம்
/
தகவல் சுரங்கம் : தேசிய கடல்சார் தினம்
PUBLISHED ON : ஏப் 05, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
தேசிய கடல்சார் தினம்
இந்தியாவின் முதல் நீராவிக் கப்பலான 'எஸ்.எஸ்.லாயல்டி', 1919 ஏப்., 5ல் மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்தது. அதை நினைவுகூறும் வகையில் அந்நாளே தேசிய கடல்சார் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்திய கப்பல் துறையின் மகத்தான பணிகளை சமூகத்திற்கு வெளிப்படுத்துவதே இத்தினத்தின் நோக்கம். இந்திய கடற்கரையின் நீளம் 7517 கி.மீ., நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் கப்பல் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் வெளிநாட்டு ஏற்றுமதியில் 90 சதவீதம் துறைமுகம் மூலமே நடைபெறுகிறது. இந்தியாவில் 13 பெரிய துறைமுகங்கள் உள்ளன.

