உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : செப் 21, 2026 12:29 AM

அ நிறம் | அளவு
தகவல் சுரங்கம்
அமைதி, சிவப்பு பாண்டா தினம்
அமைதியே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை. போர், வன்முறைகளை தடுப்பது, அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் ஐ.நா., சார்பில் செப்.21ல் உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அமைதியில் முதலீடு - ஒவ்வொருவருக்கும், எங்கெங்கும், ஒவ்வொரு நாளும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
* இந்தியா, சீனா, பூடான் உள்ளிட்ட நாடுகளில் சிவப்பு பாண்டாக்கள் வாழ்கின்றன. இவை 20 ஆண்டுகளில் 50 சதவீதம் அழிந்து விட்டது. இவற்றை பாதுகாக்க வலியுறுத்தி செப்.21ல் உலக சிவப்பு பாண்டா தினம் கடைபிடிக்கப்படுகிறது.
