PUBLISHED ON : மார் 31, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
ஈபிள் டவர் தினம்
உலக அதிசயங்களில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈபிள் டவர். உயரம் 1083 அடி. தரைப் பகுதியில் அகலம் 410 அடி. நான்கு மாடிகள் உள்ளன. கோபுரத்துக்கு மேல் செல்வதற்கு 300 படிகள் உள்ளன. 5 லிப்ட் வசதியும் உள்ளது. 7300 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டது. 7 ஆண்டுக்கு ஒருமுறை வண்ணம் தீட்டப்படுகிறது. இதை வடிவமைத்தவர் கஸ்டேவ் ஈபிள். இதன் கட்டுமானப்பணி 1887 ஜன. 28ல் தொடங்கப்பட்டது. 22 மாதங்களுக்குப்பின் 1889 மார்ச் 31ல் முடிக்கப்பட்டது. இத்தினத்தை நினைவுபடுத்தும் விதமாக மார்ச் 31ல் ஈபிள் டவர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.