/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பெரிய மின் நிலையம்
/
தகவல் சுரங்கம் : பெரிய மின் நிலையம்
PUBLISHED ON : ஜூலை 09, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பெரிய மின் நிலையம்
மத்திய பிரதேசத்தில் உள்ள விந்த்யாச்சல் அனல் மின் நிலையம், இந்தியாவின் பெரிய மின் உற்பத்தி மையம் என அழைக்கப்படுகிறது. இதன் கட்டுமானப்பணி 1982ல் தொடங்கி 1987ல் மின் உற்பத்தி தொடங்கியது. உலகளவில் 9வது இடத்தில் உள்ளது. இங்கு 4783 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய அனல்மின் நிலையம் இதை நடத்துகிறது. இதில் உற்பத்தியாகும் மின்சாரம் ம.பி., குஜராத், மஹாராஷ்டிரா, கோவா, சத்தீஸ்கர், டாமன் டையூ, தாதர் நகர் ஹவேலிக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.