/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : தேசிய கல்வி தினம்
/
தகவல் சுரங்கம் : தேசிய கல்வி தினம்
PUBLISHED ON : நவ 11, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
தேசிய கல்வி தினம்
சுதந்திர போராட்ட வீரர், எழுத்தாளர், இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பதவி வகித்தவர் அபுல் கலாம் ஆசாத். இவரது பிறந்த தினம் நவ. 11, தேசிய கல்வி தினமாக கடைபிடிக்கப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் துவக்ககால கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர். காங்., தலைவராக இருந்துள்ளார். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டார். இவரது பதவிக்காலத்தில் 1951ல் நாட்டின் முதல் ஐ.ஐ.டி., 1953ல் பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) போன்றவை தொடங்கப்பட்டன. 'சுதந்திரத்தை வென்ற இந்தியா' உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.