/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : தேசிய ஊட்டச்சத்து வாரம்
/
தகவல் சுரங்கம் : தேசிய ஊட்டச்சத்து வாரம்
PUBLISHED ON : செப் 01, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
தேசிய ஊட்டச்சத்து வாரம்
ஆரோக்கியமான உடல்நலனுக்கு ஊட்டச்சத்து மிக அவசியம். இதன் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1982 முதல் மத்திய அரசு சார்பில் தேசிய ஊட்டச்சத்து வாரம் (செப். 1 - 7) கடை பிடிக்கப்படுகிறது. 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது போல நலமுடன் இருப்பதற்கு இயற்கை, சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். உணவில் பழங்கள், காய்கறி, புரதம், இறைச்சி என அனைத்து வித சத்துகளும் சமச்சீரான அளவில் இடம் பெறவேண்டும். பாரம்பரிய இயற்கை உணவில் கவனம் செலுத்துவது நல்லது.