/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : பெரிய தொலைநோக்கி
/
தகவல் சுரங்கம் : பெரிய தொலைநோக்கி
PUBLISHED ON : ஆக 25, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
பெரிய தொலைநோக்கி
திருப்பத்துார் அருகே ஜவ்வாது மலையில் காவலுாரில் வைணு பாப்பு வான் ஆய்வகம் உள்ளது. மத்திய அரசின் கீழ் செயல்படும் இதில் 1986ல் 7.67 அடி விட்டமுடைய தொலைநோக்கி நிறுவப் பட்டது. ஆசியாவில் பெரியது. இதன் மூலம் பல நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. 1786ல் ஆங்கிலேயர் வில்லியம் பெட்ரி சென்னையில் சொந்த பயன்பாட்டுக்கு அமைத்த ஆய்வகம், மெட்ராஸ் வானியல் ஆய்வகமானது. இது 1899ல் கொடைக்கானலுக்கு மாற்றப் பட்டது. 1960ல் இதன் இயக்குநராக இருந்த வைணு பாப்பு, ஆய்வகத்தை காவலுாருக்கு மாற்றம் செய்தார்.