/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : உலக ஆட்டிசம் தினம்
/
தகவல் சுரங்கம் : உலக ஆட்டிசம் தினம்
PUBLISHED ON : ஏப் 02, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
உலக ஆட்டிசம் தினம்
உலகில் 6.10 கோடி பேர் 'ஆட்டிசம்' பாதித்தவர்கள். 100ல் ஒரு குழந்தை ஆட்டிசத்தால் பாதிக்கப்படுகிறது. ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. குழந்தையின் 10 - 18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும். இப்பாதிப்பு உள்ளவர் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், சமூகத்தில் கலந்து பழகும் திறன் போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். ஒரே மாதிரி விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வர். ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஏப். 2ல் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.