/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : ரசாயன ஆயுதங்களுக்கு தடை
/
தகவல் சுரங்கம் : ரசாயன ஆயுதங்களுக்கு தடை
PUBLISHED ON : நவ 30, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
ரசாயன ஆயுதங்களுக்கு தடை
உலகில் சில நாடுகளுக்கு இடையே போர் நடக்கிறது. சில நாடுகளில் உள்நாட்டு சண்டை நடக்கிறது. இந்த போர்களில் பயன்படுத்தப்படும் ரசாயன ஆயுதங்களால் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். முதலாம் உலகப்போர் (1914 - 1918) காலத்திலேயே ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன. அப்போரில் ஒரு லட்சம் பேர் பலியாகினர். எனவே போரில் ரசாயன ஆயுதங்களை தடை செய்ய வலியுறுத்தியும், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் ஐ.நா., சார்பில் நவ.30ல் ரசாயன ஆயுதங்களால் பாதிக்கப்பட்டோருக்கான நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.