/
தினம் தினம்
/
தகவல் சுரங்கம்
/
தகவல் சுரங்கம் : சிறுவர்களுக்கான நிதியம்
/
தகவல் சுரங்கம் : சிறுவர்களுக்கான நிதியம்
PUBLISHED ON : நவ 27, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தகவல் சுரங்கம்
சிறுவர்களுக்கான நிதியம்
இரண்டாம் உலகப்போரின் போது (1939 - 1945) பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்த சிறுவர்களுக்கு உணவு, சுகாதார வசதிகளை வழங்குவதற்காக 1946ல் ஐ.நா., சிறுவர்களுக்கான அவசரகால நிதியம் தொடங்கப்பட்டது. இது 1953ல் சிறுவர்களுக்கான நிதியம் என பெயர் மாற்றப்பட்டது. தற்போது குழந்தைகளுக்கான நோய்தடுப்பு, எச்.ஐ.வி., பாதித்த தாய்மார்களின் குழந்தைகள், ஊட்டச்சத்து, சுகாதாரம் வசதிகளை மேற்கொள்ளும் பணியில் இந்த அமைப்பு ஈடுபட்டுள்ளது. இதன் தலைமையகம் அமெரிக்காவின் நியூயார்க். 192 நாடுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது.

